History.Mine

My History = Happiness + Sorrows + Wish + Fate + etc.

குறிப்பு :- இந்த ப்ளாக்'ஐ பார்த்துட்டு கடுப்பாயிடீங்கனா யாரும் என்ன திட்டாதீங்க. காரணம் இதுல சில விஷயங்கள் உங்கள கண்டிப்பா கடுபேத்தும். அதோட இத நா தான் எழுதினேனு சொன்னா என்னோட நண்பர்கள் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியே சொன்னாலும், உனக்கு ப்ளாக் எழுத எல்லாம் நேரம் இருக்கடான்னு கேப்பாங்க!

05.06.2008 :- Friends vs Relations
எனக்கு சின்ன வயசுல இருந்தே நண்பர்கள தான் ரொம்ப பிடிக்கும் தாய் தந்தையை காட்டிலும். ஏன்னா அவங்க தான் என்னோட முதன்மை மற்றும் சிறந்த நண்பர்கள். Under Construction...

21.11.2008 :-
B.E. படிக்கும் போதே நா சமைக்க கத்துக்கிட்டேன். அதுல எனக்கு கோர்சா இருந்து சொல்லி கொடுத்தது என் அம்மா தான். சமைக்கரப்பொ எதன்னா சந்தேகம்'ன அம்மாக்கிட போன் பண்ணி கேப்பேன். என்னோட சமையல் யாரு சாப்டாலும் எப்போதும் நல்ல reviews தான் வரும். Under Construction...

22.08.2013 :- My Invention / Innovation
எனக்கு கனவுகள் ரொம்ப அதிகம், தினமும் இரவுல தூங்கும் போதெல்லாம் ஒவொரு துறையிலும் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கு, அதுல புதுசா என்ன சாத்தியமாகும்'னு நெனைசிட்டே தூங்குவேன். B.E. படிக்கும் பொது ஐ.டி. துறையில என்னோட தனிப்பட்ட முயற்ச்சில எதாவது கண்டுபிடிக்கணும் சொல்லிட்டு ஐ.டி.'ல எந்த அளவுக்கு வளர்த்திருக்கு அதுல நிறைகள் மற்றும் குறைகள் என்னென இருக்குன்னு யோசிச்சிட்டே இருப்பேன். அதனால சின்ன சின்ன application'ல இல்லாத features எல்லாம் நான் அதுல கொடுப்பேன்.

ஆனா எனக்கு படிக்கும் பொது செக்யூரிட்டி'ல ப்ராஜெக்ட் பண்ணனும்'நு ரொம்ப ஆர்வமா இருந்தேன். ஏன்னா அதுல அதிகமா மெயில் அக்கௌன்ட், சிஸ்டம் அக்கௌன்ட்'ல எல்லாம் செக்யூரிட்டி ப்ராப்லம் இருக்குறத கேள்விபட்டேன். அதனால தான் நா செக்யூரிட்டி'ஐ தேர்ந்தெடுத்தேன். ஆனா சரியான ரிசோர்ஸ் இல்லாதனால என்னால அப்போ அத பண்ண முடியல. அதுக்கப்புறம் 1 மற்றும் 1/2 வருஷத்துக்கு அப்புறம் தான் என்னால பண்ண முடிஞ்சுது(22.08.2013). அதை Microsoft XP'ல C# யூஸ் பண்ணி அதிலும் கொஞ்சம் ஆராய்ச்சியெல்லாம் பண்ணி கடைசீல தான் பண்ணிருந்தேன். அத பத்தி நா பின்னாடி சொல்றேன். நண்பர்கள் மத்தில படிப்புல இல்லனாலும் படைப்புல சிறந்தவன்னு ஒறு பேரும் இருந்தது.
குறிப்பு :- தினமும் தூங்கும் நேரம் தான் எனக்கு யோசிப்பதற்கு அமைதியான சூழல் கெடைச்சது, அது தான் சிறந்ததும் கூட.


01.10.2014 :- Raksha bandhan
'ரக்ஷா பந்தன்' கடந்து சில நாட்கள் ஆயிருக்கும், ஒரு நாள் நான் உடன் பிறந்த சகோதரிகளாக நினைக்கற இரண்டு பேர் வந்து என் கைல ராக்கி கட்ட வந்தார்கள். அதுக்கு அவங்க பைல இருந்த ராக்கி எடுத்து ஒரு புறம் ஒரு சகோதரியும் மறு புறம் இன்னொரு சகோதரியும் சேர்ந்து கட்டினாங்க. அப்புறம் என்கிட்டே ராகி கட்டினதுக்கு காசு குடுடா தம்பின்னு ரெண்டு பெரும் ஒருசேர கேட்டாங்க. எங்கிட்ட இருந்தது ரூ. 1 மட்டும்தான். சமாளிப்பதற்கு வழி தெரியாம, அதை எடுத்து ரெண்டு பேரு கிட்டயும் இந்த ஒரு ரூபா எனக்கு ஒரு கோடி மாதிரி அதனால இந்த ரூபாவ 50 50 ஷேர் எடுதுக்கோங்கன்னு சொல்லி மனக்குறையோட கொடுத்தேன் அதை திட்டியவாறு மனநிறைவோட வாங்கிகிட்டங்க. இருந்தும் என்னால எதையும் வாங்கி கொடுக்க முடியலன்னு கவலையா தான் இருந்தது. பர்ஸ்ல கொஞ்சமாவது காசு வெச்சிருக்கணும் அட்வைஸ் பண்ணலாம் ஆனா பர்ஸ் வாங்க கூட காசு இல்லேங்கிறது தான் உண்மை..:-(


என் கண்களில் வலி இருந்தாலும், இழப்பு நேரினும் இலக்கை நோக்கி முன்னேறுவேன். முழற்சியே நிரந்தரம், தோல்வி அல்ல. வெற்றியும் அல்ல..:)

Popular posts from this blog